உடல் முழுவதும் சாமி கயிறு கட்டி என்ன பிரயோஜனம்? மேக்கப் மேனை அசிங்கப்படுத்திய யோகிபாபு..!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகா பாபு. சினிமாவுக்கு வந்த புதிதில் ஒருசில வாய்ப்புகளே வந்தது. காலம் செல்லச் செல்ல நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார்.
சைடு நடிகராக, நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவர், தற்போது நகைச்சுவையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் பிரபலமாக இருக்கும் யோகிபாபு முருக பக்தர். எந்த ஊரில் எல்லாம் முருகன் கோயில் இருக்கிறதோ அங்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்வது யோகிபாபுவின் வழக்கம். யோகிபாபு கை, கழுத்து என சாமி கயிறை கட்டிக் கொண்டு அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவராக வலம் வருகிறார் யோகிபாபு.
இந்நிலையில், யோகிபாபுவின் மேக்கப் மேனுக்கு நாள் ஒன்றுக்கு 8000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அவர் 5000 ரூபாயை எடுத்துக் கொண்டு மேக்கப் மேனுக்கு சம்பளமாக 3000 ரூபாய் மட்டுமே கொடுத்து உள்ளார். இதை கேள்விப்பட்ட மேக்கப்மேன் திடீரென வேலையை விட்டுவிட்டார். இப்படி நடந்து கொள்ளும் யோகி பாபுவுக்கு ஒரு நாளைக்கு 11 லட்சம் வரை சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.