நடிகையால் சினிமாவை விட்டு தெறித்து ஓடிய சிவகுமார்.. உண்மை உடைத்த பிரபலம்..!
சினிமா பிரபலங்கள் பற்றி பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் சிவகுமார் சினிமாவில் இருந்து என்ன காரணத்திற்காக விலகினார் என்ற விஷயத்தை பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ஒரு நாள் சிவக்குமார் சீரியல் ஒன்றில் நடித்து வந்த போது ஷாட்டில் உணர்ச்சிவசமாக ஒரு டயலாக்கை பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அதே சீரியலில் நடித்த ஒரு துணை நடிகை சத்தமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால், சிவகுமாருக்கு மிகவும் இடையூறாக இருந்துள்ளது. இதனால், அவர் என்னமா நான் இங்க டயலாக் பேசிட்டு இருக்கேன் நீ இப்படி சத்தமா போனில் பேசிட்டு இருக்க என்று அந்த நடிகையை திட்டியுள்ளார்.
அதற்காக துணை நடிகை என்ன சார் இப்படி பண்றீங்க இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க, எப்படியும் டப்பிங் பேச போறீங்க, டப்பிங் ல பாத்துக்கோங்க என்று நக்கலாக பதில் அளித்துவிட்டு மீண்டும் தொலைபேசியில் சத்தமாக பேசியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் அன்றைய கால சினிமா எப்படி இருந்தது, இன்றைய கால சினிமா எப்படி இருக்கிறது என்று யோசித்து இனி வரும் காலங்களில் சினிமா மற்றும் சீரியலில் நடிக்கவே கூடாது என்று சிவகுமார் முடிவு செய்து விட்டதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.