பொத்தி பொத்தி பாதுகாத்த காதல்? ஸ்ரீதேவியின் மரணத்திற்குப் பிறகு ஃப்ளாஷ்பேக்கை வெளியிட்ட கமல்..!

kamal-revealed-about-his-relationship-with-late-actress-sridevi

இந்திய நடிகைகளின் பேரிழகியாக இன்று வரை கொண்டாடப்படுபவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் மறைந்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் இன்றுவரை அவருடைய ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ஸ்ரீதேவியை சுற்றி நிறைய மர்மங்களும், சர்ச்சைகளும் இப்போது வரை இருந்துதான் வருகிறது.

ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு கமலஹாசன் சொன்ன விஷயம் தற்போது கூட சர்ச்சையை தான் கிளப்பியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து வந்த காலத்தில் ஸ்ரீதேவி தான் அவர்களுடைய ஆஸ்தான கதாநாயகி.

kamal-revealed-about-his-relationship-with-late-actress-sridevi

ஸ்ரீதேவி நடித்தாலே அந்த படம் ஹிட். கமல் ரஜினி இருவரில் ஸ்ரீதேவி யாரை திருமணம் செய்து கொள்வார் என்கிற பெரிய போட்டியே, அப்போது ரசிகர்களிடையே நடந்தது. அப்போது, கமலுடன் நடித்த ஒரு படம் ரிலீஸ் ஆனபோது கமல் மற்றும் ஸ்ரீதேவி காதலிக்கிறார்கள் என்ற வதந்தியும் கிளம்பியது.

kamal-revealed-about-his-relationship-with-late-actress-sridevi

அந்த நேரத்தில் தான் ஸ்ரீதேவி பாலிவுட் சென்று திருமணம் செய்யும் வரை இந்த வதந்தி தொடந்து வந்தது. ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு கமலிடம் இந்த வதந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த கமல், ஸ்ரீதேவிக்கும் தனக்கும் இடையேயான உறவு அண்ணன் தங்கை உறவு போன்றது. ஆனால், சினிமாவுக்கு இந்த கதை எல்லாம் ஒத்து வராது.

kamal-revealed-about-his-relationship-with-late-actress-sridevi

தாங்கள் இருவரும் காதலர்கள் போல் காட்டிக்கொண்டதால் தான் தங்களுடைய படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அதனால் தான் தங்களை சுற்றி இருக்கும் வதந்திகளை அப்படியே விட்டுவிட்டோம். எல்லாமே சினிமா வியாபாரம் தான் மற்றபடி இருவரும் உண்மையான அண்ணன் தங்கைகள் போல் தான் பழகினோம் என்று வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this post