மிக்ஜாம் புயல்.. வெள்ளத்தில் சிக்கி ரோபோ ஷங்கர் காயம்..!(வீடியோ)
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை புரட்டிப் போட்டு இருக்கிறது. வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. இதனால், மக்கள் அத்தியாவசிய வசதி இன்றியும், மின்சாரம் இன்றியும், உணவு தட்டுப்பாடு என பல விஷயங்களை ஏற்பட்டு உள்ளது.
மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில், ரோபோ சங்கர் மழை வெள்ளத்தில் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்க சென்ற சமயத்தில் அருகில் இருக்கும் வீட்டின் தகர சீட்டு பறந்து வந்து ரோட்டில் விழுந்ததில், ரோபோ ஷங்கர் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை தற்போது, வீடியோவாக எடுத்து ரோபோ சங்கர் வெளியிட்டுள்ளார்.
Share this post