அது பெருசா இருக்கணும்.. பெண்கள் குறித்து வெளிப்படையாக பேசிய கஸ்தூரி..!
தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர் கஸ்தூரி. இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் பட படங்களில் நடித்து வந்தார். உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி பெண்கள் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், அவர் எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் பெரிய உணர்வுகளையும் கொன்று இருப்பார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். இருந்தாலும், உங்களை அதிகமாக நேசிப்பார்கள் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.