ஜிம் ட்ரைனருடன் பேக் போஸ் புகைப்படம்.. லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய லாஸ்லியா ஜிம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது இவரது ஜிம் ட்ரைனருடன் இணைந்து பேக் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் லாஸ்லியாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.
Share this post