ஹிட் படத்தை தவறவிட்ட உதயநிதி ஸ்டாலின்… நடிச்சியிருந்தால் அந்த நடிகர் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்..!

Udayanidhi is a superhit film to be missed4

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், பின்னர் நடிகராகவும் மாறி ஹிட் கொடுத்த ஒரே நபர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே. ஆனால் அவர் ஒரு சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்டார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரிப்பாளராக உதயநிதி தயாரித்த முதல் படம் குருவி. ஆனால் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பின்னர் சூர்யாவின் ஆதவன் மற்றும் கமலின் மன்மதன் அம்பு படங்களை தயாரித்தார். இந்த படமும் சரியாக வசூல் செய்யவில்லை.ஏஆர் முருகதாஸின் 7ம் அறிவு படத்தை தயாரித்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

Udayanidhi is a superhit film to be missed4

2008 ஆம் ஆண்டு முதல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த படங்களுக்கு கூடுதலாக, பிற பேனர்களில் இருந்து பின்வரும் படங்கள் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டன. 2010ல் வெளியான கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா, ஏ.எல்.விஜய்யின் மதராசப்பட்டினம், ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கிரண் மற்றும் பிரபு சாலமனின் மைனா ஆகிய படங்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. அனைத்துமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தான் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக ஃபிலிம்பேர் விருதையும் வென்றார். அதன் பிறகு கமர்ஷியல் ஹீரோவாக பல படங்களில் நடித்தார்.

Udayanidhi is a superhit film to be missed4

தற்போது அமைச்சராகிவிட்டதால் நடிப்பில் ஒதுங்கியுள்ளார். இவர் கடைசியாக நடித்த மாமன்னன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை யாரும் பார்த்திராத புதுமையான கேரக்டரில் வடிவேலு நடித்தார்.

அதற்கு முன் கலகத்தலைவன் படத்தில் நடித்தார். இந்தப் படத்தை உதயநிதியே தயாரித்துள்ளார். இப்படத்தை வசனம் எழுதி இயக்கியவர் மகிழ் திருமேனி. இந்தப் படம் ஓகே ஆனதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு.

Udayanidhi is a superhit film to be missed4

முதலில் மகிழ் திருமேனி தனது தடம் கதையை எழுதி உதயநிதியிடம் நடிக்க சொன்னார். ஆனால், உதயநிதி கதையை கேட்டநிலையில், சில பிரச்சனைகளால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்காகவே கலக தலைவன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாதாராம்.

Share this post