இப்படி சாந்த சொரூபினியா மாறிட்டாரே... ராஷ்மிகா மந்தனாவின் ‘RM24' பட லுக் இதுதானா..!

the-girlfriend-first-look-rashmika-mandanna-is-intriguing-in-this-unusual-love-story

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா, சீதாராம் போன்ற படங்களில் ஜொலித்த ராஷ்மிகா, இந்தியா முழுவதும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற புஷ்பாவின் முதல் பாகத்தின் கதாநாயகி ராஷ்மிகா.

the-girlfriend-first-look-rashmika-mandanna-is-intriguing-in-this-unusual-love-story

இப்படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. குறிப்பாக ‘சாமி சாமி’ பாடலும் அதன் நடனமும் தான்.

பாலிவுட்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அமிதாப் பச்சனுடன் குட்பை மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு போன்ற படங்களில் நடித்த ரஸ்மிகா, ரன்பீர் கபூரின் அனிமல் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ரன்பீர் உடனான முத்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

the-girlfriend-first-look-rashmika-mandanna-is-intriguing-in-this-unusual-love-story

தற்போது ராஷ்மிகா மந்தனாவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்ந்துள்ள ராஷ்மிகா, “உலகம் சிறந்த காதல் கதைகளால் நிறைந்துள்ளது. ஆனால் இதுவரை கேள்விப்படாத அல்லது பார்த்திராத சில காதல் கதைகள் உள்ளன. மேலும் ‘தி கேர்ள்பிரண்ட்’ அப்படிப்பட்ட ஒன்று. #RM24.” என பகிர்ந்து உள்ளார்.

Share this post