இமான் சில விஷயங்களை மறைச்சுட்டாரு.. மோனிகா சொல்வது எல்லாம் பொய்.. பிரபல நடிகை பேட்டி..!
இசையமைப்பாளர் இமான் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்ன நடந்தது என்ற விவாதம் வேகமாக பரவி வருகிறது.
இமான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை விளக்கம் அளிக்காத நிலையில், நடிகை குட்டி பத்மினி இது குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன் லியோ படத்தின் ஃபீவர் இணையத்தில் அதிகமாக இருந்தபோது, அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு பேட்டியை கொடுத்திருந்தார் இமான். எதார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது சிவகார்த்திகேயனைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்தன. அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது ஏன் சிவகார்த்திகேயனை வைத்து எந்த படமும் செய்யவில்லை என்ற கேள்விக்கு இமான், சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண முடியாது என்றும், சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றும் கூறினார்.
என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியும் ஆனால் அது எனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் இப்போது எதுவும் கூற விரும்பவில்லை என்றார். இந்த நிலையில், சில விமர்சகர்கள் சிவகார்த்திகேயன் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை.
அவர் ஒரு ஜென்டில்மேன். விவாகரத்து நேரத்தில் நானும் இமானும் பிரிந்து விடக்கூடாது என்று சிவகார்த்திகேயன் இமானிடம் கூறினார். அதனால் சிவகார்த்திகேயனை ஒரு பேட்டியில் இமான் பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கலாம். இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். நான் இமானின் குடும்ப நண்பர்கள். இமானின் தந்தையையும் இமானையும் பல வருடங்களாக நாங்கள் நன்கு அறிவோம்.
சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த நான், வீட்டிற்கு வந்தபோது, திடீரென என் போனை எடுத்தேன். அப்போது இமானின் வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்தது. அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் இப்படி ஒரு வீடியோவில் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு தெரிந்ததை சொல்ல போகிறேன். இமானுக்கும் அவரது முன்னாள் மனைவி மோனிகாவுக்கும் இடையே சில பிரச்னைகள் நடந்து வந்தன. இமான் வேலை நிமித்தமாக சில நாட்கள் வெளியூரில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, வீட்டுக்கு வந்ததும், வீட்டுக்குள் இருக்கும் போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தன.
ஓரிரு முறை மோனிகா அவனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு நானே சமரசம் செய்து வைத்து அவரை மீண்டும் ஒன்றாக வாழ வைத்தேன். மோனிகா என்னைக் கூப்பிட்டுப் பேசினார். ஆனால் இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இமான் என்னிடம் சொல்லவில்லை.
இமானின் அப்பா எனக்கு ஒருமுறை போன் செய்து உன்னிடம் பேச முடியுமா? நேரில் சந்திக்கலாமா என்று கேட்டார், நிச்சயம் எப்ப வேணும்னாலும் வாங்க சார் என்றேன். அப்போது இமானும் அவரது தந்தையும் உங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களைச் சொன்னார்கள். இமானின் முதல் திருமணத்தில் நானும் இருந்தேன். இமானின் இரண்டாவது திருமணத்திற்கு நான் இருந்தேன்.
இமான் அவர்கள் வீட்டில் ஒரே மகன் என்பதால் அவரது தந்தைக்கு அதிக பாசம் அவர் மீது இருந்தது. அதனால் பெற்றோரிடம் அதிக பாசம் இருந்தது. இமானின் அப்பாவும் மோனிகாவுக்கும் செட் ஆகவில்லை. அதுவும் அவர்களின் பிரச்சனைக்கு காரணமாக இருந்தது. இமானும் தன் தந்தையை மிகவும் நேசிக்கிறார். அதனால் அவர் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் என அந்த பேட்டியில் குட்டி பத்மினி பகிர்ந்துள்ளார்.