Viral Video: ‘உருட்டு உருட்டு’ சமந்தாவுடன் இதை செய்ததாக சொன்ன VJ ரம்யா.. வெச்சு செய்யும் ரசிகர்கள் !
மிஸ் சென்னை பட்டம் வென்ற விஜே ரம்யா, கலக்கப்போவது யாரு என்னும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
நிறைய பிரபலங்களை பேட்டி காண்பது மற்றும் விருது நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா, பிரபலங்களுக்கு பேவரைட். டிடி, பாவனா வரிசையில் புகழ் பெற்ற விஜேகளில் ஒருவர் என்றே சொல்லலாம். மேலும், மொழி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவ்வப்போது சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்க தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிட்னஸ் மீது தீரா ஆர்வம் கொண்டிருக்கும் ரம்யா, அதுக்கென்ன யூடியூப் சேனல் தொடங்கி பிட்னஸ், வெயிட் லாஸ் பற்றி எடுத்துரைத்து வருகிறார். இவர் தனது கணவரை விவாகரத்து செய்து அம்மா அப்பா உடன் வாழ்ந்து வருகிறார்.
நடிகை ரம்யாயாவும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். ரம்யா திருமணத்திற்கு கூட நடிகை சமந்தா வந்திருந்தார். அதே போல இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ஆனால், கடந்த சில காலமாக இவர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். இதுவரை சமந்தாவுடன் சேர்ந்து ரம்யா 3 முறை திருப்பதி மலைக்கு நடந்தே சென்று ஏறி இருக்கிறார்.
அதிலும் கடந்த 2018ம் ஆண்டு இவரும் சமந்தாவும் திருப்பதி மலைக்கு நடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ரம்யா 3,500 படிக்கட்டுகளை 2.5 மணி நேரத்திற்கும் குறைவாக ஏறி விட்டதாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இவர்கள் இருவரும் மூன்று முறை திருப்பதி மலைக்கு நடந்தே சென்றுள்ளார்களாம். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா, சமந்தாவும் நானும் திருப்பதி மலையை ஒன்றே முக்கா முதல் 2 மணி நேரத்திற்குள் ஏறி விடுவோம் என்று கூறி இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அது எப்படி 3500 படிக்கட்டுகளை 2 மணி நேரத்தில் ஏற முடியும். ஒரே உருட்டா இல்ல இருக்கு. என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்
Naanum #samantha vum 2hrs la thirupati mala yeriduvom....#VjRamya .... ithu nambara mathiriyaa irukku 😂😂 pic.twitter.com/uOeQhZNdK4
— chettyrajubhai (@chettyrajubhai) December 10, 2022