'தளபதி 67ல் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?' விஷால் விளக்கம்

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கி இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்‌ஷன் வைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தினால், விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். வசூலிலும் விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால், வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில், நேற்று தளபதி67 படத்தை AVM ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படத்தை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது. இப்படத்திற்காக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை சஞ்சய் தத் மட்டுமே உறுதிசெய்யப்பட்டு உள்ளார்.

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

அதேபோல் நடிகர் விஷாலை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்கவும் முயற்சி செய்தார் லோகேஷ். இதற்காக மார்க் ஆண்டனி பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று விஷாலை சந்தித்து பேசினார். இதனால் விஷால் இப்படத்தில் நடிப்பது உறுதி தான் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஷாலே அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடிகர் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளின் போது தளபதி67 படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

vishal says reason why to drop down offer for thalapathy67 video viral

அதன்படி லத்தி பட ரிலீசுக்கு பின்னர் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஷூட்டிங் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்த ஆண்டு முழுவதும் பிசியாக இருப்பதால் தளபதி67 படத்திற்காக என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை. லோகேஷ் என்னை அணுகியபோதும் அவரிடம் இதைத்தான் சொன்னேன். இருப்பினும் எதிர்காலத்தில் விஜய்யை சந்தித்து அவருக்கு கதை சொல்லி, அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார் விஷால்.

Share this post