கஜினி படத்திற்காக அசினுடன் அஜித் போட்டோஷூட்.. வெளியான மிரட்டல் போட்டோஸ்!

2008ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திக் சூர்யா, அசின், நயன்தாரா, பிரதீப் ராவத், ரியாஸ்கான் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கஜினி. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் ஹிந்தி ரீமேக் எடுக்கப்பட்டது.
இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல், கஜினி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த சூர்யா இல்லை, அஜித் தான். அப்போது கஜினி படத்திற்கு மிரட்டல் என தலைப்பு வைத்திருந்தார். அஜித் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் தீனா. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.
தீனா படத்தின் வெற்றிக்குப்பின் அஜித் - முருகதாஸ் கூட்டணியில் கஜினி படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், எதோ சில காரணங்களால் இப்படம் துவங்கவில்லை. அப்போது கஜினி படத்திற்கு மிரட்டல் என தலைப்பு வைத்திருந்தார். மிரட்டல் படத்திற்காக அஜித் மற்றும் அசினை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுத்துள்ளார் முருகதாஸ். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.