'யாரும் கடைசி வரை வரமாட்டாங்க..' Divorce பற்றி பேசியுள்ள பிரியங்கா? வைரலாகும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளை விட அந்த சேனலில் வேலை செய்யும் அனைத்து விஜேக்களும் பிரபலம். டிடி, பாவனா, ரக்ஷன், மா கா பா, பிரியங்கா உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
தற்போது, மக்கள் விரும்பும் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பிரியங்கா, கடந்த சில வருடங்களாக கணவரைப் பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பிரியங்கா அவரை பற்றி எதுவும் பேசவில்லை, மேலும் பிரீஸ் டாஸ்கின் போது அவரது கணவர் வராதது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவரைப் பற்றி பேச மறுப்பதாகவும் செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் பிரியங்கா அதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை வசித்து வருகிறார். பிரியங்கா விஜய் டிவி ஷோக்கள் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி தனியாக youtube சேனலும் நடத்தி வருகிறார். அதில் அவர் பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் லண்டன் சென்ற வீடியோ ஒன்றில் எமோஷ்னலாக ஒரு கருத்தை கூறி இருக்கிறார். “விஜய் டிவியில் 10 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன், தொகுப்பாளராகி 14 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இனி கிடைக்கும் நேரத்தில் ஊர் ஊராக சுற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. அதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக புரிந்துகொண்டேன். பயணம் தொடங்கும்போது வாழ்க்கையில் நிறைய பேர் வருவாங்க. நடுவில் அவர்கள் போவாங்க, வருவாங்க. ஆனால் இறுதிவரை நாம் மட்டும் தான்” என பிரியங்கா கூறி இருக்கிறார்.
திருமணம் - விவாகரத்து பற்றி தான் அவர் இப்படி பேசி இருக்கிறாரோ? என ரசிகர்கள் சந்தேகித்து கேள்விகள் எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.