அதர்வா இல்ல.. வணங்கான் படத்தில் சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை களமிறக்கிய பாலா..

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இதையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வெற்றிகண்ட இயக்குனர் பாலாவுக்கு, கடைசியாக வெளிவந்த தாரை தப்பட்டை, நாச்சியார் மற்றும் வார்மா ஆகிய படங்கள் கைகொடுக்கவில்லை.

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா, 3வது முறையாக இணைந்த திரைப்படம் ‘வணங்கான்’. 2டி நிறுவனம் சார்பாக சூர்யா, ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் அறிவித்தனர்.

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்கள் கன்னியாகுமரியில் நடைபெற்றது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

இந்நிலையில், அதன்பின் நிறுத்தப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த சில வாரத்திற்கு முன் நடிகர் சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக இயக்குனர் பாலாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யா விலகினாலும், வணங்கான் படம் கைவிடப்படவில்லை என்பதையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

அதில் வணங்கான் படப்பணிகள் தொடரும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அதர்வாவை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

ஆனால் அது வெறும் வதந்தி என தெரியவந்தது. இந்நிலையில், தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யை நடிக்க வைக்க இயக்குனர் பாலா முடிவு செய்துள்ளாராம். இதன்மூலம் முதன்முறையாக பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். இப்படத்தில் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளாராம் பாலா. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun vijay to replace suriya in vanangaan movie soon official announcement will be released

Share this post