வாரிசு Audio Launch தேதியை ஆர்வக்கோளாறில் அறிவித்த விஜய் டிவி பிரபல VJ.. வைரலாகும் பதிவு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் விரைவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் மற்றும் விஜய் டிவி பிரபலம் ராஜு ஜெயமோகன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதை தாம் தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஆர்வக்கோளாறில் ராஜு ஜெயமோகன் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷேர் செய்ய தொடங்கினர்.
பின்னர் அவசர அவசரமாக அந்த ட்வீட்டை டெலிட் செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் படக்குழுவே இன்னும் அதிகாரப்பூர்வமாக இசை வெளியீட்டு விழாவை அறிவிக்காத நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்வான உடனேயே ஆர்வக்கோளாறில் ராஜு இப்படி செய்துவிட்டார், அதை அவர் டெலிட் செய்து விட்டு மன்னிப்பும் கோரி இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.