"கன்ட்ரோல் பண்ண முடில.. மேடையிலேயே சுச்சு போய்ட்டேன்.." விஜே கல்யாணி பகீர் பேட்டி..!

vj kalyani recollects and shares incident happened in childhood

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர் நடிகை பூர்ணிதா என்னும் விஜே கல்யாணி. சீரியல், திரைப்படங்கள், விளம்பரப்படங்கள் என பணியாற்றி பிரபலமானவர். அள்ளித்தந்த வானம், ஜெயம் உள்ளிட்ட படங்கள் மூலம் செம பேமஸ் ஆனா இவர், வளர்ந்த பின், பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

vj kalyani recollects and shares incident happened in childhood

திருமணத்திற்கு பின்னர் திரைத்துறையில் இருந்து விலகி இருக்கும் இவர், தற்போது பிரபல தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பல சேனல்களின் பேட்டிகளில் பங்கேற்று தனக்கு சிறு வயதில் நடந்த பாலியல் ரீதியான தொல்லைகள், சில மறக்க முடியாத சம்பவங்கள் என பேசி வருகிறார்.

அப்படி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அவர் பேசிய விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர் கூறியதாவது, “7, 8 வயது இருக்கும் போது நான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போது மேடையில் எனக்கு பாத்ரூம்(சிறுநீர்) வந்தததாக இயக்குனரிடம் சைகையில் சொன்னேன். 2 நிமிஷம் என்று சொல்லி ஒரு மணி நேரம் நிற்க வைத்துவிட்டார். என்னால் முடியாமல் மேடையிலேயே சுச்சு போய் விட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Share this post