நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா கணவர் மாரடைப்பால் மரணம்.. மனதை உலுக்கும் ஸ்ருதியின் பதிவு..!

நாதஸ்வரம் என்னும் பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியா. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் பிரபலம் அடைந்த இவர், கல்யாண பரிசு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா, வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகர் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகும் நிலையில், திடீரென மாரடைப்பால் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் காலமானார். அரவிந்த் சேகர் கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர்.
30 வயதே ஆன அரவிந்த் சேகர் அவர்களின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்ருதியின் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இழப்புக்கு ரசிகர்களும், சின்னத்திரை நடிகர் நடிகைகளும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.