தலைவர்170 - தலைவரோட கெட்டப் இதுதானா..? இணையத்தில் ட்ரெண்டாகும் நியூ லுக்.!
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர். இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.
இதில் ரஜினி அவர்கள் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஞானவேல் இயக்கியிருந்தார். அதேபோல் இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், புதிய லுக்கில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முடியையும், தாடியையும் நன்றாக ட்ரிம் செய்தபடி இருக்கும் அவரை பார்த்து, இதுதான் தலைவர்170 கெட்டப்பாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.