பிக்பாஸ் 7ல் இப்படியொரு பெரிய மாற்றமா..? இதுதான்யா ரியல் ட்விஸ்டு.!

Huge twist going to happen in biggboss 7 tamil

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.

Huge twist going to happen in biggboss 7 tamil

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்படவுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

இதனால், இந்த சீசனில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர். பிக் பாஸ் சீசன் 7 ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

Huge twist going to happen in biggboss 7 tamil

அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமா ரியாஸ், ஜாக்குலின், பிரித்திவிராஜ்(பப்லு), தினேஷ்( நடிகை ரக்ஷிதா கணவர்), ரேகா நாயர், ஸ்ரீதர்(டான்ஸ் மாஸ்டர்) ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ சூட் தற்போது நடந்து முடிந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த சீசனில் ஒரு முக்கிய மாற்றம் வர உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்த சீசனில் இரண்டு வீடுகளாக, போட்டியாளர்களை இரண்டாக பிரித்து அவர்களை தனித்தனி வீடுகளில் முதலில் வைத்திருப்பார்களாம்.

Huge twist going to happen in biggboss 7 tamil

அதன் பின் ஒருகட்டத்தில் இரண்டு வீடுகளையும் ஒன்றிணைப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த மாற்றம் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பதால் அனைவரும் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.

Share this post