விவாகரத்திற்கு பின் ஜெயிலர் FDFS'ஐ ஒரே தியேட்டரில் பார்த்த தனுஷ் - ஐஸ்வர்யா.. வைரலாகும் வீடியோ..
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இன்று படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தைக் காண திரைப்பிரபலங்களும் ரசிகர்களுக்கு இணையாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சென்னை ரோகினி திரையரங்கில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், நடிகரும், ரஜினியின் தீவிர ரசிகனுமான ராகவா லாரன்ஸ், தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா உள்ளிட்டோர் வந்தனர்.
இதையடுத்து நடிகர் தனுஷ், அதன் பின்னர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெயிலர் என்கிற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்து வந்தார். தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்ற பின்னர், முதன்முறையாக ஒரே தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளதை பார்த்த ரசிகர்கள், மனைவியை நேரில் தனுஷ் சந்தித்தாரா ? என கேள்வி கேட்டு வருகின்றனர்.