‘பட்டத்த பறிக்க 100 பேரு..' விஜய்யை தாக்கி எழுதின வரியா.. வைரலாகும் வீடியோ..!

does hukum lyrics is targeting vijay for superstar title

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

does hukum lyrics is targeting vijay for superstar title

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இன்று படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தைக் காண திரைப்பிரபலங்களும் ரசிகர்களுக்கு இணையாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி பேசியதை விஜயை தான் மறைமுகமாக சொல்லுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர்.

அதனை உறுதி செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. “ஜெயிலர்” படத்தில் வரும் ஹக்கும் பாடல் செம வைரல் ஆகி வரும் நிலையில், அப்பாடலில் வரும் ‘பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்திபிடிப்பது போல இருந்தது.

இந்த வரிகளை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுதியிருந்தார். இசைவெளியீட்டு விழாவில் ‘ஹக்கும்’ பாடல் ஒலித்த போது பாடலாசிரியர் சூப்பர் சுப்பு சரியாக ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரி வந்த போது அவர் விஜய்யின் ட்ரேட் மார்க் நடன அசைவை செய்தார்.

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் சூப்பர் சுப்பு ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரியை கண்டிப்பாக விஜய்யை குறிப்பிட்டு தான் எழுதி இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Share this post