முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு பிறந்தநாள்.. மகாலக்ஷ்மியின் பிறந்தநாள் பதிவு வைரல் !
ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர். இவர் கடந்த ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
மஹாலக்ஷ்மி பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம்.
மஹாலக்ஷ்மி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விமர்சனங்களை தவிர்த்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.
சில நாட்களுக்கு முன் மகாலட்சுமியின் முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மகாலட்சுமி. கணவரை பிரிந்தாலும் மகனை பார்த்து கொள்கிறார் மகாலக்ஷ்மி.