ச்சே.. நயன்தாரா இந்த சூப்பர்ஹிட் படத்த மிஸ் பண்ணிட்டாங்களே..! எந்த படம்னு தெரியுமா..?

nayanthara missed out acting in thiruchitrambalam movie

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

nayanthara missed out acting in thiruchitrambalam movie

இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

nayanthara missed out acting in thiruchitrambalam movie

பின்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். அவர்களுக்கு ‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ மற்றும் ‘உலக் தெய்வேக் என் சிவன்’ என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில், மிஸ் செய்த சூப்பர்ஹிட் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான். இப்படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் நயன்தாராவால் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நித்யா மேனனிடம் சென்றுள்ளது.

nayanthara missed out acting in thiruchitrambalam movie

Share this post