விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா..?

jason sanjay to join with popular actor information getting viral

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவரது மனைவி சங்கீதா மற்றும் இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.

jason sanjay to join with popular actor information getting viral

இவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் கலை, சினிமா சார்ந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டு குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜேசன் விஜய் இயக்குனராக அறிமுகமாக உள்ளது குறித்த தகவல் வெளியானது.

அதன் பின்னர், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா உள்ளிட்டோரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

jason sanjay to join with popular actor information getting viral

Share this post