யுவன் போட்ட இந்த டியூன் தான் ஜவான் பட பாடலா? காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்..!

பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர்.
3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. இதனைத் தொடர்ந்து, பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார்.
அந்த பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார். அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார். தற்போது அனிருத் அவர்கள் சியான் 60, இந்தியன் 2, லியோ, அயலான், ஜெயிலர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
மேலும், இவர் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் ஜவான்.
சமீபகாலமாக, அனிருத் இசையில் பாடல் வெளியானாலே, காப்பி சர்ச்சையில் அவ்வப்போது சிக்குவதும் வழக்கம். அந்த வகையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி இருந்தது.
யூடியூப்பில் செம வைரலாகி வரும் ஜவான் பாடல், தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதன்படி இப்பாடலின் டியூன் மாநாடு படத்திற்காக யுவன் இசையமைத்த வாய்ஸ் ஆஃப் யூனிட்டி தீம் மியூசிக்கை சுட்டு அனிருத் இசையமைத்ததாக கூறி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, இது வலிமை படத்தில் இடம்பெறும் நாங்க வேற மாரி பாடலுக்காக யுவன் இசையமைத்த டியூன் என கூறுகின்றனர். இதைப்பார்த்த அனிருத் ரசிகர்கள், நாங்க வேறமாரி பாடல் டியூனே அனிருத் இசையமைத்த மரண மாஸ் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது தான் எனக்கூறி வருகின்றனர்.