SK21 - முக்கிய மனிதரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இத யாருமே எதிர்பாக்கல..!
விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.
இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர், டான் போன்ற தொடர் வெற்றிப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார். மாவீரன் ரிலீஸை தொடர்ந்து அயலான் திரைப்படத்தில் நடித்து வரும் இவரது அடுத்த திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், SK21 திரைப்படத்தில் ஒரு முக்கிய மனிதரின் வாழ்கை வரலாற்றை கொண்ட கதை என கூறியுள்ளார். ராணுவ பின்னணி கதைக்களத்தை கொண்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் இந்த படத்தின் கதை.
அவர் பத்திரிக்கையாளராக ஆக வேண்டும் என ஆசைப்பட்டு ஜெனலிசம் படித்த அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைக்கிறது. தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அடைந்துவிடுகிறார். முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறினார்.