Audio Launch'ல் சூப்பர்ஸ்டார் பேச்சினால் இந்த திடீர் முடிவெடுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ..!
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர்.
அதிலும் தமன்னா ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் பேசிய ஒரு விஷயத்தினால் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நூதன கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் அவர்கள், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என வெளியிட்டுள்ளனர்.