பாலிவுட்டில் தடம் பதித்த டிடி.. புகைப்படங்களுடன் வைரலாகும் பதிவு !

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான். விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை. இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், பா. பாண்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற திரைப்படங்களில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

தற்போது குஷ்பூவின் Avni Cinemax தயாரிப்பில், சுந்தர் சி இயக்கும் Coffee With காதல் படத்திலும் நடித்து வருகிறார். இதில், பிக் பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ் மற்றும் விடியோஸ் பதிவிட்டு வருகிறார். பெரிய அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி அல்லது முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, சக்ஸஸ் பார்ட்டி போன்றவற்றில் இவர் தொகுப்பாளினியாக இருப்பதும் வழக்கம்.

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

அண்மையில் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா, The Legend ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். The Legend ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வரும் போது டிடி தனது கையில் Walking Stickவுடன் நடந்து வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தது.

Vj dd in bollywood with popular celebrity social media post getting viral on social media

இந்நிலையில் டிடி தற்போது பாலிவுட் திரைப்படமான Shamshera படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை பேட்டியெடுத்துள்ளார். இது குறித்து புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ள டிடி “பாலிவுட்டில் தமிழ் தொகுப்பாளர்களுக்கு இது மேலும் வழிகளைத் திறக்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Share this post