பிரம்மிக்க வைக்கும் விக்ரம் பட Shooting Spot வீடியோ.. இணையத்தில் வைரல் !

Vikram stunt shooting spot video getting viral on social media

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

Vikram stunt shooting spot video getting viral on social media

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர். 4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

Vikram stunt shooting spot video getting viral on social media

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Vikram stunt shooting spot video getting viral on social media

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Vikram stunt shooting spot video getting viral on social media

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது. சூர்யாவின் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது.

Vikram stunt shooting spot video getting viral on social media

இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 350 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.

Vikram stunt shooting spot video getting viral on social media

இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 1 மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

விக்ரம் படத்தின் சண்டைக் காட்சிகள் உருவாக்கப்பட்ட வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இரட்டை சண்டை இயக்குநர்கள் அன்பறிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த காட்சிகளை பதிவிட்டுள்ளனர்.

Share this post