Latest Viral Photo: பார்ட்டியில் நடிகர் அஜித்.. பேமிலி பார்ட்டியில் மதுபானம் ? கடும் விமர்சனங்களுக்கு உள்ளான போட்டோ..

Alcohol in ajith family treat party photo getting viral on social media

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Alcohol in ajith family treat party photo getting viral on social media

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Alcohol in ajith family treat party photo getting viral on social media

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Alcohol in ajith family treat party photo getting viral on social media

இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் அவர்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.

Alcohol in ajith family treat party photo getting viral on social media

இதற்கிடையே தற்போது நடிகர் அஜித் தனது மொத்த குடும்பத்துடன் ஒரு பார்ட்டி விருந்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அஜித் கையில் கிளாஸ் அவரின் அருகில் நபரின் கையில் மதுபானம் உள்ளது போல் தெரிகிறது. இதை கண்ட நெட்டிசன்கள் பல விதமாக அந்த புகைப்படத்தை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அது பிரான்ஸ் நாட்டில் உள்ள அஜித் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது சரியாக தெரியவில்லை.

Alcohol in ajith family treat party photo getting viral on social media

Share this post