மாயாவால் பாதுகாப்பு இல்லை.. களத்தில் குதித்த அர்ச்சனா.. ரணகளமான பிக்பாஸ் வீடு..!
பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். அடுத்தாக, அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது. குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
இந்நிலையில், அதாவது விசித்ரா ரெட் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டது என்று ஒரு காரணத்தை கூறியிருந்தார். அதை வழக்கம்போல் பிக் பாஸ் போட்டுக் கொடுக்க அடுத்த நிமிடம் சண்டை ஆரம்பிக்கிறது.
மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐசு, நிக்சன் என ஐவரும் ரவுடிகள் போல் விசித்திராவை வம்புக்கு இழுத்தனர். அவரும் எல்லாத்துக்கும் ரெடி என்பதுபோல் களத்தில் குதித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காதவாறு அர்ச்சனா என்ட்ரீ கொடுத்தார். அழுகாச்சி அச்சுவா இது என்று வியக்கும் வகையில் ஒவ்வொரு பாயிண்டையும் நெத்தியடியாக எடுத்து வைத்தார்.
மாயா மற்றும் அவருடன் இருக்கும் போட்டியாளர்கள் அர்ச்சனாவை சீண்டிய நிலையில் அர்ச்சனா இந்த வீட்டில் பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.