உங்க பொண்ணு மட்டும் காவி கலர் பிகினி'ல போஸ் கொடுக்கலாமா? போட்டோவுடன் இயக்குனரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
ஹ்ரித்திக் ரோஷனின் ‘வார்’ படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பதான். இப்படத்திலிருந்து பெஷாராம் ரங் பாடல் வெளியானது.
அந்த பாடலில் பிகினி உடைகளில் நடிகை தீபிகா படுகோன் ஆடியுள்ள கவர்ச்சி ஆட்டம் ஆபாச நடிகைகள் ஆடுவதை போல இருப்பதாகவும், சாஃப்ட் பார்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
ஷாருக்கானின் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பெஷாராம் பாடலில் அவர் காவி நிற பிகினியை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பதை ஏகப்பட்ட இந்து அமைப்புகள் கண்டித்தன.
அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது மட்டுமின்றி மோசமான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளது விளாசப்பட்டு வந்தது.
சமீபத்தில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ஒரு வார்னிங் வீடியோ பதிவிட்டு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். இந்நிலையில், தற்போது இவரது மகள் மல்லிகா அக்னிகோதிரி, காவி நிறத்திலான பிகினி உடை ஒன்றை அணிந்து, கடற்கரையில் ஹாயாக படுத்திருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள், பொங்கி எழுந்து ஷாருக்கான் தீபிகா படுகோன் காவிநிற பிகினி உடை அணியக்கூடாது… ஆனால், உங்கள் மகள் மட்டும் காவிநிற பிகினி உடையில் ஹாய்யாக போஸ் கொடுக்கலாமா? என திட்டி திட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட் அக்கவுண்ட்டாக மாற்றினார். எனினும் இவர் பதிவிட்ட போது ஷாருக்கான் ரசிகர்கள், ஸ்க்ரீன்ஷாட் எடுத்த புகைப்படங்களை தற்போது வைரலாக்கி இயக்குனர் விவேக் அக்னிகோத்திரியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.