Viral Video: 'குளிக்க போய் 3hr ஆகுதா, அதெல்லாம் ஒட்டினு வரனும்ல' – ஷிவினை படுமோசமாக கமெண்ட் செய்த அசீம்.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ் எவிக்ட் ஆகி வெளியேறினர்.
பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை நாயகனாக வலம் வரும் அசீம், அவ்வப்போது எதாவது எல்லைமீறி பேசி அதன் வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் அவரை வறுத்தெடுப்பது வழக்கம். அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம்.
இந்நிலையில், ஷிவின் குறித்து அசீம் பேசியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ஷிவின் குளிக்க போய் 3 மணி நேரம் ஆகிவிட்டது என கூறி, விக் எல்லாம் ஒட்டிட்டு வரவேண்டாமா என கலாய்த்து பேசியுள்ளார்.
Abuser azeem and his chinchaks
— Shiviniiii fan 💜 (@shivin_army) December 28, 2022
commenting about shivin makeup
all these need to questioned as this is not the first time it is happening @ikamalhaasan @vijaytelevision
SHIVIN WINNING HEARTS#ShivinSupremacy#Shivin𓃵#VoteForShivin#BiggBossTamil6 pic.twitter.com/KjPni6v0bT