பிக்பாஸ் நடிகைக்கும் சிம்புவுக்கும் திருமணமா..? நடிகையே சொன்ன விஷயம்.. வெளியான வீடியோ

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . சமீபத்தில், இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிம்பு பெயர் அடிபடுவது வழக்கம். இந்நிலையில், பிக்பாஸ் நடிகைக்கும் நடிகர் சிம்புவுக்கும் திருமணம் என புது வதந்தி பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘Oo Solriya Oo Oohm Solriya’. இதில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால் மற்றும் அனிதா சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ‘உங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்ட மிகவும் நகைச்சுவையான செய்தி என்ன’ என்று இந்த மூவரிடமும் பிரியங்கா கேட்டார். இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா தத்தா ‘எனக்கும் நடிகர் சிம்புவுக்கும் திருமணம் என்று செய்தி வந்தது’ என கூறினார்.
அவரை தொடர்ந்து சாக்ஷி அகர்வால், ‘நான் தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் முதல் Girl Friend என்று செய்தி வெளிவந்தது’ என்று கூறினார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.