ஏன் இந்த திடீர் முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக்கிங் போஸ்ட் பதிவிட்ட விஷ்ணு விஷால்.. Viral Tweet

Vishnu vishal announces break from social media platform through tweet

கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால், நடிப்பு துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளையும் குவித்தார்.

Vishnu vishal announces break from social media platform through tweet

இதனைத் தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராச்சசன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் அங்கீகாரத்தையே தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.

Vishnu vishal announces break from social media platform through tweet

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக, இவர் நடிப்பில் FIR திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மோகன்தாஸ் திரைப்படம் ஷூட்டிங் ஒரு அளவிற்கு முடிவடைந்து விட்டது. பிரபல நடிகர் நடராஜ் அவர்களின் மகள் ரஜினி நடராஜ் அவர்களை காதல் திருமணம் செய்த இவர், 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

Vishnu vishal announces break from social media platform through tweet

இதன் பின்னர், பேட்மிட்டன் பிளேயர் ஜ்வாலா அவர்களை 2020ம் ஆண்டு நிச்சயம் செய்து, 2021 ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இது குறித்து, சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. இது பற்றி, பிரிவின் காரணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது பற்றி ஒரு பேட்டியில் கவலை தெரிவித்திருந்தார் விஷ்ணு விஷால்.

Vishnu vishal announces break from social media platform through tweet

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணு விஷால், தற்போது சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக பதிவு போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த முடிவு என கொஞ்சம் ஷாக் அடைந்துள்ளனர்.

Vishnu vishal announces break from social media platform through tweet

Share this post