'நயன்தாராவுக்கு இஷ்டமில்லை என சொல்லும்போது கட்டாயப்படுத்த முடியாது' - விஷால் விளக்கம்

vishal speaks about nayanthara not attending promotion

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

vishal speaks about nayanthara not attending promotion

இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

vishal speaks about nayanthara not attending promotion

இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் மரம் நடும் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நடந்த உரையாடலின் போது, நயன்தாரா எந்த பட புரொமோஷனிலும் கலந்து கொள்வதில்லை என குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், புரமோஷனுக்கு வர இஷ்டமில்லை என கூறினால் அவரை கட்டாயப்படுத்த முடியாது.

எந்த திரைப்படத்தின் புரமோஷனுக்கும் வரமாட்டார் என்பதை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை, அவர் புரமோஷன் நிகழ்ச்சியில் வந்து ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் தான், பள்ளி தலைமை ஆசிரியர் கிடையாது.

vishal speaks about nayanthara not attending promotion

ஒருவர் தனக்கு இஷ்டமில்லை என்று சொல்லும் போது நாம் ஒன்றும் செல்ல முடியாது. ஆனால் அதே நேரம், ஒரு தயாரிப்பாளர் - நடிகர் நடிகைக்கு தேவையான ஊதியத்தை வழங்கும்போது அந்த படத்தின் புரமோஷனுக்கு வருவதில் எந்த தவறும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

Share this post