பட்டையை கிளப்பும் BiggBoss 7 Contestants லிஸ்ட்..! ப்ரோமோஷூட் முடித்த கமல்.. ஆரம்பிக்கலாங்களா..?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்படவுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
இதனால், இந்த சீசனில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர். பிக் பாஸ் சீசன் 7 ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமா ரியாஸ், ஜாக்குலின், பிரித்திவிராஜ்(பப்லு), தினேஷ்( நடிகை ரக்ஷிதா கணவர்), ரேகா நாயர், ஸ்ரீதர்(டான்ஸ் மாஸ்டர்) ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ சூட் தற்போது நடந்து முடிந்ததாக சொல்லப்படுகிறது.