'அந்த இடம் அப்படி தான் இருக்கனும்னு அவசியமா?' தயங்காமல் பேசிய மீதா ரகுநாத்..!
கடந்த 2022ம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றவர் நடிகை மீதா ரகுநாத். OTT யில் வெளியான இப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதற்கு முன்னர், ஜீ5’ல் வெளியான 5678 வெப் சீரீஸ் மூலம் நடிக்கத் தொடங்கியவர். தற்போது, மணிகண்டன் எதார்த்தமான நடிப்பில் வெளியான குட் நைட் படத்தில் ஹீரோயினாக நடித்து மேலும் பிரபலமானார். குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பும், வசூலையும் பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீதா ரகுநாத், பெண்களுக்கு முடி நேராக மினுமினுப்பாக இருந்தால் தான் அழகு என்று பிம்பம் ஒன்று மக்கள் மனதில் உள்ளது. முடி நேராக நீளமாக இருந்தாலும், சுருள் சுருளாக இருந்தாலும் அது அழகு தான் என்று மீதா ரகுநாத் ஓப்பனாக பேசியுள்ளார்.