தமன்னாவுக்கு போட்டியாக 'காவாலா' பாடலுக்கு ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்.. Trending Video..!
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர்.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இப்படத்தில் தமன்னா ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது. அதிலும் இப்பாடலுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் நடனமாடி தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.