நயன்தாரா இந்த பிரபல தமிழ் நடிகரோட தங்கையாமே.. நடிகரின் பேட்டி வைரல்..!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது.
2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. பின்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். அவர்களுக்கு ‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ மற்றும் ‘உலக் தெய்வேக் என் சிவன்’ என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில், பிரபல தமிழ் நடிகர் தனது சமீபத்திய பேட்டியில் நயன்தாரா குழந்தைகளுக்கு நான் தான் மாமா, தாய் மாமன் சீர் எல்லாம் செய்யணும் என பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது. ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் புரமோஷனில் கலந்துக்கொண்ட நடிகர் சந்தானம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘வல்லவன்’ படத்திலிருந்து எனக்கு நயன்தாரா நல்ல பழக்கம். என்னை அண்ணன்’னு தான் கூப்பிடுவாங்க. படம் சம்பந்தமாக பேசுவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றேன். எனக்காக பயங்கரமா சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி இருந்தாங்க. நான் போனப்ப ரெண்டு குழந்தைங்க கிட்ட, மாமா வந்து இருக்காங்க பாருன்னு சொன்னாங்க. நானும் என்னம்மா என் மடில வைச்சு தான் காது குத்துவியான்னு கேட்டேன்.
சினிமாத்துறைல எனக்குன்னு கிடைச்ச தங்கச்சி அவுங்க. தாய் மாமன் சீர் எல்லாம் செய்யணும் என கலகலப்பாக சந்தானம் பேசியுள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.