இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே த்ரிஷா குடித்தாரா..? ஆதாரத்துடன் பிரபலம் சொன்ன விஷயம்..!
பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.
90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 பாகங்களில் நடித்து மக்கள் ஆதரவை பெற்ற இவர், லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார். இப்படமானது அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படி திரையுலகில் பிரபலமாக வலம் வரும் திரிஷா, அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர். அவர் பயங்கரமாக மது குடிப்பார் என்ற விஷயமும் அரசல்புரசலாக திரைத்துறையில் பேசப்படுவதுண்டு. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில், “சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங். டாப் ஹீரோவும், டாப் ஹீரோயினும் நடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எலைட் ஷாப் எல்லாம் இல்லை. பர்மா பஜாரிலிருந்து ஒருவர் மதுபானம் வாங்கி வந்து நடிகையிடம் கொடுத்தார். அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டார். அந்தப் படம் நம்பர் பெயரில் வெளியானது” என மறைமுகமாக கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சைதாப்பேட்டையில் ஸ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டு நம்பர் பெயரில் வந்த படம் ‘ஆறு’. அப்போ ஷூட்டிங் ஸ்பாட்டில் மதுபானம் வாங்கி குடித்தது த்ரிஷாவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.