'7ஆம் அறிவு' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்..? இத நோட் பண்ணீங்களா.. வைரலாகும் போட்டோ..!
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ். இதனைத் தொடர்ந்து, ரமணா, கஜினி, 7ம் அறிவு, துப்பாக்கி என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தந்து தமிழ் திரையுலகை மட்டுமல்லாது இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் முருகதாஸ்.
கத்தி, சர்க்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்களில் 7ம் அறிவு திரைப்படம் கொரோனா பரவலுக்கு பின் பெரிதும் பேசப்பட்டது.
2011ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. இப்படம் நடிகர் சூர்யா அவர்களுக்கும் கேரியரில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில், இவ்வளவு வருட இடைவெளிக்கு பிறகு, இப்படத்தின் ஒரு ஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட Unseen Photo ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.