அஜித் உடலை கேலி செய்த பத்திரிக்கையாளர்.. பேட்டியின் மூலம் பதிலடி கொடுத்த நடிகர் அஜித்..!

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
துணிவு படத்திற்கு பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் துணிவு படத்திற்கு பின் உடல் எடை கொஞ்சம் கூடி இருப்பது போல அஜித் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது. அஜித்தின் உருவத்தை பார்த்து பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் விமர்சனம் செய்திருந்தார்.
அதில், “அஜித்திற்கு நெருக்கமான ஒருவர், ‘சார் இப்ப தினமும் வொர்க்கவுட் பண்ணி ஸ்லிம் ஆயிட்டாரு தெரியுமா?’ன்னாரு. ஏர்போர்ட்ல அஜித் வர்ற காட்சிய பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்ருப்பாரு போல யோவ்…ஸோர்ஸ், என்னய்யா இப்படி பண்ணிட்டே?” என்று ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள் அந்தணன் அவர்களை கடுமையாக திட்டித்தீர்த்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர், அஜித் மேற்கொண்ட சிகிச்சை பற்றியும் அவரும் இன்னும் சக நடிகர்களும் பேசுவது குறித்த வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
"வலைப்பேச்சு அந்தணன்" @Anthanan_Offl போன்ற ஈனப்பிறவிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!#AK pic.twitter.com/WQlvcOru2n
— Satheesh (@Satheesh_2017) July 27, 2023