இணையத்தில் வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் Family போட்டோ..!

nayanthara family photo with vignesh shivan sister family getting viral on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

பின்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். அவர்களுக்கு ‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ மற்றும் ‘உலக் தெய்வேக் என் சிவன்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

nayanthara family photo with vignesh shivan sister family getting viral on social media

இந்நிலையில், தனது கணவர் விக்னேஷ் சிவன் அவர்களின் தங்கை மற்றும் அவரது குடும்பத்தினருடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ ஒன்றை விக்னேஷ் சிவனின் தங்கை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

nayanthara family photo with vignesh shivan sister family getting viral on social media

Share this post