மேடையில் பிரபல இளம் பாடகியிடம் மோசமாக நடந்து கொண்ட இளையராஜா.. வெளுத்து வாங்கிய பிரபலம்..!

50 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இனிமையான இசையால், பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டிப்போட்டவர் இளையாராஜா அவர்கள். இன்று இசைஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு, இந்த அடைமொழியை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆவார்.
இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிறந்த இசையமைப்பாளருக்காக 5 முறை தேசிய விருது, கலைமாமணி, பத்ம பூஷன் விருது, இசைக்காக வழக்கப்படம் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், கோல்டன் ரெமி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
இசையில் மேதை என்றாலும், இவரை பற்றி தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. பலரும் இவர் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், சக கலைஞர்களை நடத்துவது குறித்தும் செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒரு மேடையில் இளையராஜா செய்த மோசமான விஷயம் குறித்து பேசியுள்ளார். அப்போது, “ஒருபோது மேடையில் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் ஒன்றை பாடிக்கொண்டு இருந்தார். அதில் ‘காணாத ஒன்றை தேடுதே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘காணாத ஒன்றை தோடுதே’ என தவறாக பாடலை பாடிவிட்டார்.
இதனை அங்கு மேடையில் இருந்த இளையராஜா ஸ்ரேயா கோஷலை பார்த்து ‘ திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என பாடி ஸ்ரேயாவை அனைவரின் முன்னிலையிலும் கேலி செய்தார். ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி பெண். ஹிந்தி பாடல்களை பாடும் பாடகி இவரை மேடையில் இப்படி செய்தது தவறு.
தமிழ் மொழி தெரியாத ஒரு பாடகி தவறாக பாடினால் அவரிடம் சொல்லி அதை திருத்த வேண்டும். அதற்கு பதில் அநாகரிகமாக கிண்டல் செய்தார் இளைராஜா. அன்றே அவர் தனது மரியாதையை இழந்துவிட்டார்” என ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார் .