'Beast படம் சரியில்ல.. Negative Reviews பாத்துட்டு.. நெல்சன் வேண்டாம்னு மாத்த சொன்னாங்க..' ரஜினி சொன்ன Shocking Truth

actor rajinikanth speech about nelson movie beast

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர். அதிலும் தமன்னா ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது.

actor rajinikanth speech about nelson movie beast

இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், நேற்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, நெல்சன், அனிருத் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல் இந்நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டாரின் பேச்சை கேட்க ரசிகர் ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது, பல விஷயங்கள் குறித்து பேசிய அவர் ஜெயிலர் படம் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் ஓப்பனாக பேசினார். நெல்சன் ஜெயிலர் படத்தில் கமிட் ஆனது குறித்து பேசிய அவர், “அண்ணாத்த படத்திற்கு பின் மிகப்பெரிய கேப் ஆகிப்போச்சு. அதற்கு காரணம், இயக்குனர்கள் சிலர் சொன்ன கதை எதுவுமே திருப்தி அளிக்கல. நிறைய கதை ரிஜெக்ட் செய்ததால் ஒருகட்டத்தில் கதை கேட்கறதையே நிறுத்திட்டேன்.

actor rajinikanth speech about nelson movie beast

ஆனால், நெல்சன் என்னிடம் கதை சொன்னதும் புடிச்சுப்போய் நல்லா இருக்குனு சொன்னேன். கதை ஓகே ஆனதும், அனிருத், நெல்சன், நான் மூவரும் இணைந்து ஜெயிலர் புரோமோஷூட் எல்லாம் முடிச்சு படத்தையும் அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டோம்.

அப்புறம் தான் பீஸ்ட் ரிலீஸ் ஆனது. பீஸ்ட்டுக்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்து படம் நல்லா போகலனு தெரிஞ்சதும் விநியோகஸ்தர்கள், நெருங்கிய நண்பர்கள், சினிமா துறையை சேர்ந்த சிலர் என நிறையா பேர், எனக்கு போன் செய்து இயக்குனர மாத்த சொன்னாங்க. இதையடுத்து சன் டிவி டீம் உடன் ஒரு மீட்டிங் நடந்தது. அப்போது, சார் மோசமான விமர்சனங்கள் வருவது உண்மை தான் சார், ஆனால் விநியோகஸ்தர்கள் யாருக்கும் நஷ்டமில்லை. படம் பாக்ஸ் ஆபிஸ்ல நல்ல வசூல் செஞ்சிருக்குனு சொன்னாங்க.

மேலும், இப்போ ஜெயிலர் படம் நெல்சன் கூட பண்ண போறோம்னு அறிவிச்சாச்சு, இப்போ நான் இந்த படம் பண்ணலை என்று சொன்னால் நெல்சன் எதிர்காலம் என்ன ஆவது. கதை தான் தோற்றுப்போகிறது. எப்போதுமே ஒரு நல்ல இயக்குனர் தோற்றுப்போவதில்லை.” என சூப்பர்ஸ்டார் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share this post