'விடாமுயற்சி' படத்திலிருந்து திரிஷா விலகல்..? இவர் தான் அஜித் ஜோடியா..? வெளியான அப்டேட்..!

trisha to get replaced in ajith vidamuyarchi movie due to callsheet problem

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்தது.

trisha to get replaced in ajith vidamuyarchi movie due to callsheet problem

இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகினார்.

trisha to get replaced in ajith vidamuyarchi movie due to callsheet problem

மேலும், விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. AK62 படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

trisha to get replaced in ajith vidamuyarchi movie due to callsheet problem

கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களினால் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

trisha to get replaced in ajith vidamuyarchi movie due to callsheet problem

ஆனால், ஷூட்டிங் லேட் ஆகி வருவதால், மற்ற படங்களுக்கு திரிஷா கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தற்போது கால்ஷீட் தருவது சிரமம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த படங்களை முடித்துவிட்டு விடாமுயற்சியில் இணைந்துகொள்கிறேன் என திரிஷா கேட்டுள்ளார்.

trisha to get replaced in ajith vidamuyarchi movie due to callsheet problem

அதற்குள் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்பதினால் திரிஷாவிற்கு பதிலாக நடிகை தமன்னாவை இந்த ரோலில் நடிக்க வைக்கலாம் என அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னரே, வீரம் படத்தில் அஜித் - தமன்னா ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post