'Online Rummy Ad'க்கு கூப்பிட்டாங்க.. தவறான வழியில் சம்பாதிச்ச பணம் உதவாது'.. ரம்மி குறித்து சரத்குமாருக்கு விஷால் பதிலடி
நடிகர் சரத்குமாருக்கும், விஷாலுக்கும் நடிகர் சங்க விவகாரத்தில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதை பல இடங்களில் நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில், சமீபத்தில் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்த சரத்குமார் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு பதிலளித்த சரத்குமார் ‘ நான் தேர்தலில் நின்றபோது எனக்கு ஓட்டு போட மக்களிடம் சொன்னேன் அதை அவர்கள் செய்யவில்லை. அப்போது ரம்மி மட்டும் நான் சொன்னவுடன் செய்து விடுவார்களா’ என்று பேசினார்.
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்போது விஷால் பேசிய போது, இதில் ‘“ரம்மி விளையாட்டால் எத்தனை பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும். பல பேரின் குடும்பம் இந்த சூதாட்டம் மூலம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. இப்படி பல பேரின் தற்கொலைக்குக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்.
உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டும் நிலைத்து நிற்கும். தவறான வழியில் சம்பாரித்த பணம் என்றும் உதவாது” என கூறியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது.
#Watch | "எனக்கு ஓட்டு போட சொல்றேன்.. போட மாட்டிக்கிறாங்க.. நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடிடுவாங்களா?"
— Sun News (@sunnewstamil) December 13, 2022
செய்தியாளர் சந்திப்பில் ஆதங்கப்பட்ட சரத்குமார்#SunNews | #Sarathkumar | #OnlineRummy | @realsarathkumar pic.twitter.com/iJBr7DAeEq