இரட்டை குழந்தைகள் குறித்து முதன்முறையாக பேசிய விக்னேஷ் சிவன்..

vignesh shivan speaks about twin babies in interview for the first time

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

vignesh shivan speaks about twin babies in interview for the first time

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

vignesh shivan speaks about twin babies in interview for the first time

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

vignesh shivan speaks about twin babies in interview for the first time

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.

vignesh shivan speaks about twin babies in interview for the first time

இந்நிலையில், தங்களது இரட்டை குழந்தைகள் குறித்து மனம் திறந்து ஊடகமொன்றுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்துள்ளார். அதில் இரண்டு மகன்களுக்கு தந்தை என்பதை இன்னும் தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் ஒரு தனி உலகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவழிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களில் ஒன்றுதான் குழந்தைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this post