"திருமணமான பிரபலத்துடன் தகாத உறவில் இருந்தேன்.." முதல்முறையாக ஆண்ட்ரியா வெளியிட்ட உண்மை
நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டுவர் நடிகை ஆண்ட்ரியா. விளம்பர படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்னும் திரைப்படத்தில் சாதாரண கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து, மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், தரமணி, விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார். முக்கியமாக, வடசென்னை திரைப்படத்தில் இவரது சந்திரா கதாபாத்திரம் செம வைரல் ஆனது. ஒரு போல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து, மாஸ்டர், அரண்மனை 3, வட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன, தங்கமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது, மாளிகை, பிசாசு 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆண்ட்ரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக வெளிப்படியாக கூறி, அதனால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். திருமணமான ஒரு பிரபலத்துடன் தவறான உறவு வைத்திருந்தேன், அந்த நபர் என்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார்.
நான் அப்போது செய்த தவறால், என் வாழ்க்கையே இருண்டு போனது. அதில் இருந்து வெளியே வர பல கவிதைகள் எழுதினேன். ஆதீத மன உளைச்சலுக்கு ஆளாகி, அதில் இருந்து விடுபட ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார். தற்போது, படப்பிடிப்புகள், பாடல்கள், போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா, 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், மாஸ்டர் படத்தின் மூலம் தான் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவர் உறவு வைத்திருந்த அந்த நபர் யார் என்பது குறித்த விவாதம் தான் சமூக வலைத்தளத்தில் பற்றி எரிந்து வருகிறது.